வரலாறு

நீர்வேலி மக்களின் முன்னேற்றம் கருதி 1942ஆம் ஆண்டு ஸ்ரீ
சுப்பிரமணிய சனசமூக நிலையம் நீர்வேலிக் கந்தசுவாமி கோயிலின் தெற்கு
வீதியில் அமைக்கப்பட்டது. இந் நிலையத்திற்கு ஒர்கட்டிடம் அவசியம் என
கருதப்பட்டபோது அக்கட்டடம் அமைப்பதற்கான ஆதனத்தை
காலஞ்சென்றவர்களான திரு. க. தர்மலிங்கமும் அவரின் சகோதரர் திரு. க.
தில்லைநாதனும் இவ் நிலையம் அமைக்கவும் பண்டகசாலை கட்டடம்
அமைக்கவும் நன்கொடையாக வழங்கியிருந்தனர்.
பண்டகசாலை இலாபத்தாலும் பொதுமக்களால் அளிக்கப்பட்ட
நன்கொடையாலும் இந்நிலையத்தின் கட்டடம் அமைக்கப்பட்டு அழகாக
காட்சி அளிப்பதை நீங்கள் காணலாம். மேற்குப்பக்க அறைகள்
பண்டகசாலை (தற்போது கூட்டுறவுச் சங்கம்) பாவிப்புக்காகவும் ஏனைய
பகுதிகள் நூல் நிலையமும் வாசிகசாலையாகவும் மாதர் சிசுபராமரிப்பு
நிலையமாகவும் இயங்கி வருகின்றது.


1955ஆம் ஆண்டு நடைபெற்ற நிலையத்தின் பொதுக்கூட்டத்தில்
சமுதாய முன்னேற்றக்கழகம் அமைப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. இக்
கழகத்திற்கான யாப்பும் தயாரிக்கப்பட்டது. அது அங்கீகரிக்கப்பட்டு அன்று
தொடக்கம் சமுதாய முன்னேற்றக்கழகம் செயற்பட்டு வருகின்றது. சமூக
சேவைதிணைக்களத்தால் இவ்யாப்பு அங்கீகரிக்கப்பட்டு அதன் பிரகாரம்
இன்று இக்கழகம் இயங்கி வருகின்றது.
இக்கழகத்தின் கீழ் ஸ்ரீ சுப்பிரமணிய சனசமூக நிலையம் ஒரு
அங்கமாக இயங்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. மேலும் வேலைக்கு
செல்லும் பெற்றோரினதும் வறிய பெற்றோரினதும் 6வயதிற்குட்பட்ட
பிள்ளைகளை பராமரிப்பதற்கு ஒரு நிலையம் அமைக்கப்பட வேண்டும் என
பொதுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு அரசாங்கத்திற்கு இக்கருத்து.அறிவிக்கப்பட்டது. 1955ல் சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்கள்
வீடமைப்பு. சமூகசேவைகள்ää கைத்தொழில் அமைச்சராகவும்ä திரு. ம.
ஸ்ரீகாந்தா அவர்கள் வடமாகாண அரசாங்க அதிபராகவும் கடமையாற்றிய
போது அவர்கள் இருவரினதும் கருணையால் பாலர் பகல் விடுதி
அமைப்பதற்கு ரூபா 40000 நன்கொடையாக வழங்கப்பட்டது.
பண்டகசாலைக்கு மேற்குப் பக்கமாக நீர்வேலிக் கந்தசுவாமி
கோயிலுக்குரிய ஆதனம் பாலர்பகல்விடுதி கட்டடம் அமைப்பதற்காக
சமுதாய முன்னேற்றக்கழகத்தால் 99வருடத்துக்கு வருடகுத்தகைக்கு
கழகத்தின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்டது. 08.12.1955ல் கௌரவ
அமைச்சர் சேர் கந்தையா வைத்தியநாதன் அவர்களால் பாலர் பகல்
விடுதிக்கான அத்திவாரம் இடப்பட்டது. அரசாங்க நன்கொடையுடன்
ஊர்மக்களின் சிரமதான முயற்சியால் ரூபா 20000க்கு மேற்பட்ட வேலைகள்
மேற்கொள்ளப்பட்டு பாலர்பகல்விடுதி கட்டடம் 08.07.1956ல் அப்போதைய
அரசாங்க அதிபர் திரு. ம. ஸ்ரீகாந்தா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிலையத்துக்குரிய தளபாடங்கள் பிள்ளைகளின்
விளையாட்டுக்குரிய சாதனங்கள் எல்லாம் பெறப்பட்டன. பாலர் பகல்விடுதி
இயங்கும் கட்டிடத்திற்கு தெற்குப் பக்கமாக 22.07.1956ல் 609ஆம்
இலக்கத்தில் நிறைவேற்றிய குத்தகை உறுதியின் மூலம் பெறப்பட்ட
ஆதனத்தில் பிள்ளைகளின் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டது. இவ்
2 1/2 பரப்பு ஆதனத்தை 16.11.1960ல் 2882ல் நிறைவேற்றிய அறுதி உறுதி
மூலம் சமுதாய முன்னேற்றக்கழகம் கொள்வனவு செய்தது.
இவ்வாதனத்திலேயே தற்போதும் பிள்ளைகளின் விளையாட்டு முற்றம்
காணப்படுகின்றது. இவற்றுக்காக பெரும் தொகை பணம் செலவாகியது.
வடமாகாணத்தில் இவ்வாறான நிலையம் ஒன்றுதான் புதிதாக
உருவாக்கப்பட்டதால் வெளிநாட்டிலிருந்து வரும் ஸ்தாபனங்களும் பிரமுகர்
களும் மற்றும் வெளியிடங்களிலிருந்து வரும் ஸ்தாபனங்களும் பார்வையா
ளர்களும் இந்த முயற்சிகளை பாராட்டத்தவறவில்லை. . இவ்வாறு பார்வையிட வந்த
வெளிநாட்டு ஸ்தாபனங்கள் பாலர் பகல்விடுதியின் தேவைகளில் சிலவற்றை
பூர்த்தி செய்தன.

பாலர் பகல்விடுதியின் தேவைக்கும் வசதிக்காகவும் தண்ணீர்
தாங்கியும் அதில் நீரை ஏற்றுவதற்கு மோட்டரும் பொருத்தப்பட்டது. இது
மத்திரமல்லாமல் மின்சார வசதியும் ஏற்படுத்தப்பட்டது. தற்போது சகல
அறைகளுக்கும்  மண்டபங்களுக்கும் மின் விசிறிகள் பொருத்தப்பட்டுள்ளன.
சமுதாய முன்னேற்றகழகத்திற்கான வங்கி சேமிப்பு வைப்புக்
கணக்கு 1956ஆம் ஆண்டு இலங்கை வணிக வங்கி (வர்த்தக வங்கி) யில்
ஆரம்பிக்கப்பட்டது.  மேலும தற்போது கோப்பாய் மக்கள் வங்கிக்கிளையிலும் சேமிப்புக் கணக்கு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  பாலர்பகல்விடுதிக்கு  வருமானத்தை
பெறும் நோக்கில் 1970வரை கோப்பாய், தெல்லிப்பளை, பருத்தித்துறை
ஆகிய சுகாதார பிரிவுகளிலுள்ள பாலூட்டும் நிலையங்களுக்கான பால்
விநியோகிக்கும் பொறுப்பினை சுகாதார சேவைகள் பணிப்பாளர்
அலுவலகத்துடன் ஒப்பந்தம் செய்து பெற்று மேற்கொண்டு வந்தது. இதன்
மூலம் சமுதாய முன்னேற்றக் கழகம் இலாபமடைந்ததுடன் 15க்கும் மேற்பட்ட
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினையும் வழங்கியது. இதனைவிட
மேலும் பல வருவாய் ஈட்டும் முயற்சிகளில் சமுதாய முன்னேற்றக்கழகம்
ஈடுபட்டு வந்தது.
இதைவிட பாலர் பகல்விடுதிக்கு முன்னால் அமைந்துள்ள கோயில்
வீதியை அன்று அரசாங்க நன்கொடை ரூபா 6000 ஐ பெற்று சிரமதானப்பணி
மூலம் தார்வீதியாக அமைக்கப்பட்டது.
1970இல் முன்பள்ளிச் செயற்பாட்டிற்காக பாலர்பகல் விடுதியுடன்
இணைத்து முன்பள்ளிக் கூடம் சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டு
பயிற்றப்பட்ட ஆசிரியர்கள் மூலம் இப்பிள்ளைகளுக்கு கல்வி போதிக்கப்
பட்டுவருகின்றது.
பாலர் பகல் விடுதியின் வளர்ச்சி கருதி இவ்வூர் பிரமுகர் காலஞ்சென்ற திரு
வன்னித்தம்பி செல்லத்துரை (சோதிடர்) அவர்கள் இவ்வூரில் பருத்தித்துறை
வீதிக்கு கிழக்காக 15பரப்பளவு காணியை 26.09.1960இல் 2813ஆம் இலக்க
தருமசாசன உறுதியை நிறைவேற்றி வழங்கியதுடன்  குறித்த ஆதனத்தை செவ்வனே பராமரித்து அதில் பெறப்படும் வருமானத்தை எடுத்து
பாலர்பகல்விடுதி சிறார்களின் முன்னேற்றத்துக்காக செலவு செய்ய
வேண்டும் என்றும் குறித்த ஆதனங்களை எவ்வகையாலும் பாதிக்க அல்லது
பாராதீனப்படுத்தக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
09.07.1977ஆம் திகதி நடைபெற்ற ஆண்டு விழாவின் போது பாலர்
பகல்விடுதியின் முதலாவது மலரான 21ஆவது ஆண்டு நிறைவு மலர்
வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பாலர் பகல் விடுதிக்கு காலஞ்சென்ற சிவநெறிப்புலவர்  சிவதரும
வள்ளல்ää சிவதருமபூபதி திரு. க. கனகராசா ஜே.பி தம்பதிகளும்
காலஞ்சென்ற இவ்வூர் திரு. கதிர்காமர் பூதத்தம்பி அவர்களும் தாராளமாக
உதவியுள்ளார்கள்.
1987ல் பாலர் பகல்விடுதியின் பின்புற மதில்களும் கட்டப்பட்டு 5 1/4
பரப்பு விஸ்தீரணமான பாலர் பகல்விடுதி வளாகம் சுற்றிவர மதில்களால்
பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
1995ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட அசாதாரண சூழ்நிலையால் பாலர்
பகல்விடுதி கட்டடமும் பொருட்களும் தேசமடைந்தது. இவற்றை 1997களில்
UNHCR, Save the Children போன்ற அமைப்புக்ககளின் உதவியுடன்
புனரமைக்கப்பட்டு மீண்டும் இயங்கத் தொடங்கியது.
தற்போது காலை 7.30 மணி முதல் மாலை 4.30 மணிவரை இப்பாலர்
பகல்விடுதி இயங்குகின்றது. இவ் விடுதியில் 80 மாணவர்கள் பராமரிக்கப்
பட்டு கல்வி போதிக்கப்படுவதுடன் மேற்பார்வையாளர்ää பயிற்றப்பட்ட
ஆசிரியர்கள்ää சமையலாளர்ää தொழிலாளியென ஒன்பது பேர் கடமையாற்று
கின்றனர். இச்சிறார்களுக்கு பராமரிப்புக் கட்டணமாக சிறியதொகையே
அறவிடப்படுவதுடன் முன்பள்ளி கல்விச் செயற்பாடு இலவசமாக வழங்கப்
படுவது குறிப்பிடத்தக்கது. இங்கு பயிலும் மாணவர்களின் திறன் விருத்திக்
காகவும் ஆளுமை வளர்ச்சிக்காகவும் வருடம் தோறும் பாலகர்களின்
ஆக்கத்திறன் கண்காட்சி  விளையாட்டுவிழா. கலைவிழா  சுற்றுலா என்பன
சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. இவற்றுக்காக எவ்வித பணமும்
பாலகர்களிடமிருந்து அறவிடப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இம்
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வருடந்தோறும் இலவசமாக வழங்கப்படுகின்றன. இங்கு பராமரிக்கும் பிள்ளைகளின் ஆன்மீக
வளர்ச்சிக்காகவும் பண்பாட்டு விழுமியங்களை அறிந்து பேணுமுகமாகவும்
பாலர்பகல் விடுதியில் தைப்பொங்கல்விழா  புதுவருடப்பிறப்பு
ஆடிப்பிறப்பு கூழ்காய்ச்சுதல்  நவராத்திரிவிழா  ஆசிரியர்தினவிழா
பாடசாலைக்கு செல்லும் மாணவர்களிற்கான பிரிவுபசார விழா என்பன
நடத்தப்பட்டு வருவது சிறப்பம்சமாகும். திரு.இ. க. சண்முகநாதன் அவர்களையும்ää அவருடன் இணைந்து செயற்பட்ட காலஞ் சென்றவர்களான திரு. வே. சி. அப்புத்துரை திரு. க. இராசதுரை
பிரம்மஸ்ரீ சு. இராசேந்திரக் குருக்கள் சு. கனகசபாபதி ஐயர் ஆகியோர்
என்றும் நினைவு கூரப்பட வேண்டியவர்களும் போற்றப்பட
வேண்டியவர்களுமாவர்.