தொடர்புகளுக்கு

பாலர்பகல்விடுதியின் வளர்ச்சியில் அடுத்தபடியாக தகவல் தொழில்நுட்பத்துறையில் காலடியெடுத்து வைத்துள்ளது.  பிள்ளைகளுக்கு கணனிக்கல்வியானது கடந்த சில ஆண்டுகளிற்கு முன்னரே தொடங்கி நடைபெற்று வருகிறது. அத்துடன் பாலர்நிலையத்திற்கென இணையத்தளமும் இயக்கப்பட்டு வருகிறது .

 www.palarnilayam.com என்ற இணையத்தளத்தி்ல் உங்கள்  அன்பளிப்புக்கள் மற்றும் நிகழ்வுகளின் படங்களையும் பார்க்கமுடிவதுடன் எதிர்வரும் காலங்களில் தொடர்ச்சியான பதிவேற்றம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

(E-mail) ஈமெயில் முகவரியாக  neervelycreche@gmail.com  அத்துடன் முகநூல் கணக்கும் (face book )    neervely creche  என காணப்படுகிறது. தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கு நிலையத்தின் நிலையான இலக்கம் 021 223 2120 உள்ளது. எனவே அனைவரும் பாலர்பகல்விடுதியுடன் நேரடியாக தொடர்புகொள்ளுங்கள்.

 

உணவு அனுசரணை வழங்கல்

நீர்வேலி பாலர்பகல்விடுதியும் முன்பள்ளியும் எமது பிரதேச சிறார்களின் அறிவு , ஆரோக்கியம் மற்றும் ஆளுமைவிருத்தியிலும் பண்பாடு , பாதுகாப்பு என்பவற்றிலும் கரிசணையுடன் பல தசாப்தங்களாக செயற்பட்டுவருகின்றமை யாவரும் அறிந்தது.

அறிவு , ஆரோக்கியம் , ஆளுமைவிருத்தி என்பவற்றிற்கு போசாக்கான உணவு சிறார்களுக்கு வழங்குதல் அவசியமாகும். எமது பாலர்பகல்விடுதி சமுதாய முன்னேற்றம் கருதி மிகக்குறைந்த கட்டணத்துடன் இவற்றினை நிறைவேற்றி வருகின்றது.

எமது பிரதேசத்தின் முன்னேற்றத்திலும் சிறார்களின் நலன்களிலும் அக்கறை கொண்ட அன்புள்ளங்கள்  தமது பிறந்தநாள்களிலும் , திருமண நாள்களிலும் மற்றும் உறவுகளின் பிறந்தநாள்களிலும் நினைவுநாள்களிலும் போசாக்கான உணவினை இச் சிறார்களுக்கு வழங்குவதற்காக   நிதி உதவியினை வழங்கி வருகிறார்கள்.

ஒரு நாளுக்கான உணவு அனுசரணைக்கு ஆகக்குறைந்த தொகையாக ரூபா மூவாயிரத்தினை (3000/=) பெற்றுவருகின்றோம். நிதி உதவியினை வழங்க விருப்பம் கொண்ட அன்புள்ளங்கள் எமது அலுவலகத்தில் நேரடியாக பணத்தினை செலுத்தி பற்றுச்சீட்டினை பெற்றுக்கொள்ளலாம் அல்லது வங்கி மூலம் பணத்தினைச் செலுத்தவிரும்புவோர் கோப்பாய் மக்கள் வங்கி கிளையிலுள்ள எமது சேமிப்புக்கணக்கு இல 109-2-001-4-0067091 இற்கு வரவு வைத்து எமது தொலைபேசி இல 021 223 2120  அல்லது எமது மின்னஞ்சல் முகவரி  neervelycreche@gmail.com  மூலமாக எமக்கு அறியத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.