மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி -படங்கள்

மேலும் வாசிக்க

பாலர்பகல்விடுதி மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி

நீர்வேலி தெற்கு  பாலர்பகல்விடுதி மழலைகளின் ஆக்கத்திறன் கண்காட்சி  (Exhibition)  எதிர்வரும் 14.03.2018 புதன்கிழமை மு.ப 9.00 மணியளவில் பாலர்பகல்விடுதி  மண்டபத்தில் நிலையத்தலைவர்  திரு.செ.பத்மநாதன் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வில் பிரதம விருந்தினராக கனடாவில் இருந்து வருகைதந்திருக்கும் திருமதி செல்வமணி இராஜேஸ்வரன் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார். அனைவரையும் வருகை தந்து பாலர்களின் ஆக்கங்களை கண்டுகளிக்குமாறு அன்புடன் அழைப்பதாக பாலர்பகல்விடுதி முன்பள்ளிச் சமூகத்தினர் அறிவித்துள்ளனர்.

பாலர் பகல் விடுதி சிறார்களின் கற்றல் உபகரணங்கள்

திரு.திருமதி.நந்தகுமார் சொரூபகாந்தி தம்பதிகளினால் பாலர் பகல் விடுதி சிறார்களின் கற்றல் உபகரணங்களுக்காக வழங்கப்பட்ட ரூபா.35 000.00 க்கு கொள்வனவு செய்யப்பட்ட கற்றல் உபகரணங்கள் செ.நந்தகுமாரின் தாயாரினால் சிறார்களுக்கு வழங்கப்பட்டது. இவ் நிதியை வழங்கிய நந்தகுமார் தம்பதிகளுக்குப் பாலர் பகல்விடுதி சமூகம் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் வாசிக்க

கலைவிழாவும் பரிசளிப்புவிழாவும் 23.12.2017

மேலும் வாசிக்க

ஆசிரியர் தின விழாவில்………

பாலர் பகல் விடுதியினதும் முன்பள்ளியினதும் 2017ம் ஆண்டு ஆசிரியர் தின விழாவில் இனிய விருந்தினராக திருமதி.சிவகுமார் பாலசவுந்தரி அவர்கள் கலந்து சிறப்பித்த நிகழ்வின் நிழல்கள் மேலும் வாசிக்க

விஜயதசமி விழா நிகழ்வின் நிழல்கள்…

பாலர் பகல் விடுதியினதும் முன்பள்ளியினதும் நவராத்திரி விழாவின் பத்தாம் நாள் நிகழ்வான விஜயதசமி விழா நிகழ்வின் போது எடுக்கப்பட்ட படங்கள் மேலும் வாசிக்க

நன்றி- கனடாவில் வசிக்கும் திருமதி.ஜெயராணி தர்மசேகரம்

எமது பாலர் பகல் விடுதியினதும் முன்பள்ளியினதும் அபிவிருத்திக்காக கனடாவில் வசிக்கும் திருமதி.ஜெயராணி தர்மசேகரம் மற்றும் அவரது புதல்வர் தர்மசேகரம் துஷ்யந்தன் ஆகியோர் அன்பளிப்பாக வழங்கிய ரூபா 206675.00 ற்காக எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

திரு& திருமதி. ஜீவா வாசுகி(கனடா) அவர்களுக்கு நன்றிகள்

எமது பாலர் பகல் விடுதியினதும் முன்பள்ளியினதும் 2017 ம் ஆண்டு விளையாட்டு விழாவிற்கு அனுசரணையாக ரூபா 20000.00 ஐ வழங்கிய  திரு& திருமதி. ஜீவா வாசுகி(கனடா) அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பாலர்பகல்விடுதி -விளையாட்டு விழா படங்கள் 2017

மேலும் வாசிக்க

பாலர் பகல்விடுதிச் சிறார்களின் கலைவிழா 2013

DSC_0022DSC_0026நீர்வேலி  சமுதாய முன்னேற்றக்கழகம் – பாலர்பகல்விடுதி  சிறார்களின் கலைவிழா 2013 எதிர்வரும் 14.12.2013 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பாலர்பகல்விடுதியின் இ.க.சண்முகநாதன் அரங்கில் நடைபெறவுள்ளது.தலைவர் திரு.செ.பத்மநாதன் தலமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில் பிரதமவிருந்தினராக திரு.ம.பிரதீபன் (பிரதேசசெயலர் -கோப்பாய்)அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு.க.விமலநாதன் (உதவிக்கல்விப்பணிப்பாளர்-வலயக்கல்வி அலுவலகம்)அவர்களும் திரு.கு.வாகீசன் (அதிபர் -கரந்தன் இராமுப்பிள்ளை வித்தியாலயம்)அவர்களும் திரு.புவீந்திரன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.இந்நிகழ்வில் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது.அனைவரையும் அன்புடன் அழைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க